2.திருநீலகண்ட நாயனார்

அமைவிடம் : temple icon.thiruneelagandar
வரிசை எண் : 02
இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி : சிவகாமியம்மை
தீர்த்தம் : சிவகங்கை
தலமரம் : தில்லை
குலம் : குயவர்
அவதாரத் தலம் : சிதம்பரம்
முக்தி தலம் : சிதம்பரம்
செய்த தொண்டு : சங்கம வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : தை - விசாகம்
வரலாறு : தில்லையைச் சார்ந்த குயவர் குலத்தில் திரு அவதாரம் செய்தவர். எப்போதும் திருநீலகண்டம் என்று சொல்பவர். ஒருநாள் அயலூர் சென்று இரவானதன் காரணமாக ஒரு பெண்ணின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வீடு திரும்பிய காரணத்தால் இவர் மனைவி இவரைத் தீண்ட மறுக்கிறார். எம்மைத் தீண்டுவீராகில் திருநீலகண்டம் என்று அவர் ஆணையிட அது நாள் முதல் இருவரும் ஒருவரை ஒருவர் தீண்டாமல் இதனைப் பிறர் அறியாவண்ணம் வாழ்க்கை நடத்துகின்றனர். முதுமைப் பருவம் வருகிறது. இவர்களின் நிலையை உலகுக்கு உணர்த்துவதன் மூலம் இவர்கள் பக்தியை உலகோர்க்கு வெளிப்படுத்த நினைத்த இறைவன் ஒருநாள் இவர்கள் இல்லம் வருகிறார்.ஒரு திருவோட்டினைக் கொடுத்து இதனைப் பத்திரமாக வைத்துப் பின் தாம் மீண்டும் வரும்போது தரவேண்டும் என்று கூறிச் செல்கிறார். அவ்வாறே நாயனாரும் அதனை வாங்கி பத்திரப்படுத்துகிறார். மீண்டும் ஒருநாள் இறைவர் வந்து தம் திருவோட்டினைக் கேட்கும்போது அது வைத்த இடத்தில் காணாது நாயனார் திகைக்கிறார். அவ்வோட்டினுக்குப் பதிலாக வேறு ஓட்டினைத் தருவதாகக் கூறியும் இறைவன் ஏற்க மறுத்துப் பலவாக வசைச் சொல் பேசுகிறார். இறுதியில் அவரது ஓட்டினைக் களவாடவில்லை என்று தம் குழந்தை மீது சத்தியம் செய்யுமாறு கேட்கிறார். தம்பதிகள் தமக்கு குழந்தை இல்லை என்று கூறுகின்றனர். அப்படியானால் இருவரும் தங்கள் கையைப் பிடித்தவாறு குளத்தில் மூழ்கி சத்தியம் செய்யுமாறு இறைவன் சொல்ல அவ்வாறு செய்ய இயலாமையை அறிவித்து கழி ஒன்றினைப் பிடித்தவாறு குளத்தில் மூழ்கி எழுகின்றனர். இறைவன் விசும்பில் அவர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.இருவரும் முதுமை நீங்கி இளமை பெறுகின்றனர்
முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608001 கடலூர் மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 10.00
தொடர்புக்கு : திரு. சீனு அருணாசலம்
18/16 சின்னக் கடைத்தெரு
சிதம்பரம்
தொலைபேசி : 04144-231166

இருப்பிட வரைபடம்


வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்தாடும்
நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார்
    	           - பெ. பு. 360
பாடல் கேளுங்கள்
 வேதியர் தில்லை


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க